தீவிரவாதிகள் கடத்திய ஜெர்மனி சுற்றுலா பயணி பிணமாக மீட்பு
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் சனாஸ்கார் பகுதியில் காணாமல் போன ஜெர்மன் நாட்டு சுற்றுலாப்பயணியை சடலமாகப் போலீஸார் மீட்டனர். ரங்காங் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டஇவரது சடலம் ஜெர்மனி தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் பான் கூறிய விவரமாவது:
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹர்புரூட் ரோல்ப் என்பவர் அடையாளம் தெரியாததீவிரவாதக் கும்பலால் ஜூலை மாதம் சனாஸ்கார் பகுதிக்குச் சுற்றுலா வந்திருந்தபோது கடத்தப்பட்டார்.
ரோல்பை, சனாஸ்கார்-கிறிஷ்டாவர் பகுதியில் உள்ள மலைஉச்சிக்கு தீவிரவாதிகள்அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது ரோல்ப் அவர்களிடமிருந்து தப்பிக்கமுயன்றுள்ளார். அப்போது தீவிரவாதிகளில் ஒருவரை, ரோல்ப் மலை உச்சியிலிருந்துகீழே தள்ளி விட்டார்.
இச்சம்பவத்தில் ரோல்பால் தள்ளிவிடப்பட்ட தீவிரவாதி உயிர் பிழைத்து விட்டார்.ரோல்ப் மீது ஆத்திரம் கொண்ட பிற தீவிரவாதிகள் அவரைக் கொன்றனர்.
தீவிரவாதிகள் வெளிநாட்டினரைக் கடத்திக் கொலை செய்வது இது இரண்டாவதுமுறையாகும். முன்னதாக 1995 ம் ஆண்டு நார்வே நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ்ஆஸ்ட்ரோ தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதும், அந்த வருட இறுதியில் ஹான்சின்தலையில்லாத உடல் மீட்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications