அத்வானியுடன் பேச டெல்லி விரைந்தார் கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடககாவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லி சென்றுள்ளார்.
கர்நாடக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நடிகர் ராஜ்குமாரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தினான் வீரப்பன்.இவரைக் கடத்தியதன் மூலம் வீரப்பன் கேட்கும் எந்தவித கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
வீரப்பன் மீது கர்நாடகத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை மைசூர், சாம்ராஜ்நகர், கொல்லேகால் பகுதிகளில் பதிவுசெய்யப்பட்டு மைசூரிலுள்ள தடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கர்நாடக காவல்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி சென்றுள்ள அவர் வீரப்பன் மீதான வழக்குகளை தமிழகத்துக்கு மாற்றம் செய்வது குறித்தும், வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கலாமாஎன்பது குறித்தும், மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல பிரதமரையும் சந்தித்துப்பேச கார்கே திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications