மனைவியைக் கொன்ற கணவனுக்கு 7 ஆண்டு சிறை
கோவை:
வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தி மனைவியைக் கொலை செய்தகணவனுக்கும், கொலையை மறைக்க உதவியதாக அவரது தங்கைக்கும் தலா 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூரைச் சேர்ந்தவர்பாலசுப்ரமணியம். இவர் வரதட்சணை கேட்டு தனது மனைவியைத் துன்புறுத்திவந்தார்.
கடந்த 98ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி வழக்கமான சண்டையின்போது,பாலசுப்ரமணியம், மனைவியை சுவற்றில் மோதித் தள்ளினார். இதில் தலையில்காயமடைந்து அவர் இறந்தார்.
இந்தக் கொலையை பாலசுப்ரமணியத்தின் தங்கை பாப்பாத்தி, பூச்சி மருந்து குடித்துபாலசுப்ரமணியம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான புகாரைஅளித்தார்.
இது பற்றி விசாரித்த உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.
கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிசொக்கலிங்கம், குற்றவாளிகளான பாலசுப்ரமணியம் மற்றும் அவரது தங்கைபாப்பாத்தி ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications