வருமானவரி பாக்கியைக் கட்ட லல்லு, ராப்ரிக்கு நோட்டீஸ்
பாட்னா:
ரூ 65 லட்சம் வருமானவரி பாக்கியை உடனடியாக செலுத்துமாறு பிகார் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது கணவரும், முன்னாள் முதல்வருமானலல்லுப் பிரசாத் யாதவுக்கும் வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வருமான வரித் துறை அதிகாரி ஜூக்னு சகாய் இதுகுறித்துக் கூறுகையில், வருமான வரி பாக்கி தொடர்பாகவும் லல்லு மற்றும் ராப்ரிதேவியின்சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வருமானவரித்துறைக்குச் செலுத்த வேண்டிய ரூ 65 லட்சத்தை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக லல்லுவும், ராப்ரியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வருமானவரியை எதிர்த்து வருமான வரி துறையிடம் மனுக் கொடுத்திருந்தனர். இந்த மனுவைஜூன் 7 ம் தேதி வருமானவரித்துறை தள்ளுபடி செய்தது.
இப்போது விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து ஆட்சேபனை இருந்தத், ஆகஸ்ட் 7 ம் தேதிக்குள் நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தில் மனுத்தாக்கல்செய்யலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications