வீரப்பனை மன்னிப்பதா ... எதிர்க்கிறார் சுவாமி
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுவாமி கூறியதாவது:
வீரப்பனுக்கு பொது மன்னிப்பு அளித்தால் அது தவறான முன்னுதாரணமாக அமையும். வீரப்பனுக்கு பொது மன்னிப்பு அளித்தால் நீதிமன்றத்தில் பொது நலவழக்குத் தொடர்வேன்.
தமிழக முதல்வர் கருணாநிதி மறைமுகமாக வீரப்பனை ஆதரிக்கிறார். வீரப்பன் அதிரடிப்படை வீரர்களின் நடவடிக்கையை நிறுத்தச் சொன்னால், கருணாநிதியும்அப்படியே செய்கிறார்.
வீரப்பன், விடுதலைப்புலிகள் மற்றும் வேறு சில தீவிரவாதிகள் அமைப்புடன் கருணாநிதிக்கு தொடர்பு உள்ளது.
மத்திய அரசு வீரப்பனை பிடிப்பதற்கு சிறப்புப்படை ஒன்றை அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்திருக்கிறது இதற்கு பொறுப்பேற்று கருணாநிதி பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications