பெற்றோரால் வீதிக்கு வந்த ஆண் சிசு
சேலம்:
சேலத்தில் மல்லூர் கிராமத்தில் பெற்றோரால் தூக்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு ஆண் குழந்தை ஒன்று வீதியில்கிடந்தது. அந்தக் குழந்தை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.
பால் மணம் மாறாத சின்னஞ்சிறு குழந்தையை பெற்ற தாய் வீதியில் வீசி எறிந்து விட்டு சென்று விட்டார். இந்தக்குழந்தை சினிமா தியேட்டர் அருகே வீதியில் கிடந்தது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அப் பகுதியில் வசிக்கும் மனிதாபி மானமுடைய தங்கவேல் என்பவர் அந்தக்குழந்தையை எடுத்து தான் வளர்க்க முடிவு செய்தார்.
ஆனால் குழந்தை உயிருக்குப் போராடும் நிலையில் மோசமாக இருந்ததால் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் அந்தக் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் எடை ஒரு கிலோ தான் இருக்கிறது, இதனால் பெற்றோர் அந்தக் குழந்தையை நிராதரவாக வீசி விட்டுசென்றிருக்காம் என கருதப்படுகிறது.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகள் பிறந்தஉடனே வீதியில் எறியப்பட்டு விடும் கொடுமைகள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக சேலத்தில் சமீபகாலமாகஇதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்பு உசிலம் பட்டியில் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு வந்தன. பெண் குழந்தை என்று தெரிந்தால்கருவிலேயே சிதைக்கும் கொடுமைகளும் நடை பெற்று வந்தன.
சில தினங்களுக்கு முன் சேலம் அரசு ஆஸ்பத்திரி குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை கண்டு பிடிக்கப்பட்டது.சில நாட்களிலேயே சேலம் பஸ் நிலையம் அருகே ஆண் குழந்தை ஒன்று வீசி எறியபபட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications