விற்பனைக்கு வருகிறது ஜெ.ஹெலிகாப்டர்
சென்னை:
தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்விற்பனை செய்யப்படவுள்ளது.
1991-96-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அப்போதுஅவர் அரசு முறைப் பயணம் மற்கொள்வதற்கு வசதியாக ரூ.19.8 மதிப்புள்ளசொகுசான, நவீன ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது.
முதல்வராக இருந்த 5 ஆண்டு காலத்தில் அந்த ஹெலிகாப்டரை ஓரிரு முறை மட்டுமேஜெயலலிதா பயன்படுத்தினார். ஆனால், 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில்ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார்.
கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி பதவிக்கு வந்தது. ஜெயலலிதாபயன்படுத்திய அந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த வேண்டாம் என்று
கருதிய தமிழக அரசு அதை விற்க முடிவு செய்தது.
இது தொடர்பாக அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த ஹெலிகாப்டரைவாங்க யாரும் முன் வரவில்லை. இந் நிலையில்,
அந்த ஹெலிகாப்டரை மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வாங்க விருப்பம்தெரிவித்தது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தஹெலிகாப்டரை, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி மங்கத்,
திங்கள்கிழமை பார்வையிட்டார்.
உடனே டெல்லி புறப்பட்ட அவர், உயர் அதிகாரிகளுடன் பேசி ஹெலிகாப்டரைவாங்குவது பற்றி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications