உயர்நீதிமன்றத்தில் செங்கோட்டையன் அப்பீல்
சென்னை:
ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேல் முறையீடு செய்துள்ளார்.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 2.18 கோடிஅளவுக்கு ஊழல் நடந்ததாக அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் உள்பட 4 பேர் மீது வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.05 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற மூன்று பேருக்கும் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட இத் தண்டனையை எதிர்த்து செங்கோட்டையனும், மற்றவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தனர்.
இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் தகவல்களைச் சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களுக்கு விதிக்கப்பட்டதண்டனையை ரத்து செய்யவேண்டும். மேல் முறையீட்டு மனு மீது விசாரணை முடியும் வரை எங்களை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று மனுவில்அவர்கள் கூறியுள்ளனர்.
திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்றையீட்டு மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications