இந்தியா வருகிறார் மகேந்திர செளத்ரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிஜியில் புரட்சிக்காரர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர்மகேந்திர செளத்ரி, ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தியா வருகிறார்.
இந்தியா வரும் செளத்ரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று நமது பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்த் கோஸ்வாமி துள்சிதாஸ்பிறந்த நாள் விழாவில் அவர் பேசுகையில், பிஜியின் பொருளாதார வளர்ச்சிக்குஇந்தியர்கள் அளித்துள்ள பங்கு மகத்தானது.
உலகில் இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் அவர்களுக்கு இந்தியாவின்முழுஆதரவும் எப்போதும் உண்டு.
பிஜிப் பிரச்சினையிலும் உலக அளவில் இந்தியா தொடர்ந்து கொடுத்து வந்தநெருக்கடியை அடுத்தே, செளத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல, புரட்சிசெய்த கும்பலின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டும் கைது செய்யப்பட்டார் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications