3-வது அணி நிச்சயம் ... சுவாமி ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் 3-வது அணி நிச்சயம் உருவாகும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 3-வது அணி உருவாகாது என்று சிலர் பேசி வருகின்றனர். தமிழகத்தில் நிச்சயம் 3-வது அணி உருவாகும். அதற்கான பணியில் நான் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறேன்.

எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால், தேர்தல் சமயத்தில் அவர்கள் நிச்சயம் 3-வதுஅணிக்கு வருவார்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஜனதா கட்சி சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும். தேர்தல் பணிகளை மட்டும்நான் பார்வையிடுவேன்.

மாஃபியா கும்பலிடம் அ.தி.மு.க சிக்கியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆகஸ்ட் 10-ம்தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பேன்.

கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியுள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவியாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்றவர்கள். ராஜ்குமார்கடத்தப்பட்டதற்குப் பொறுப்பேற்று கர்நாடக போலீஸ் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கக்கூடாது. பெங்களூரை மையமாக வைத்து விடுதலைப் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். ராஜ்குமார் கடத்தல்சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு உள்ளது என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+