வீரப்பன் கோரிக்கைகளும், ராமதாசும்
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் செல்லும் வழியில் நிருபர்களிடம்பேசிய அவர்,
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று அவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளகன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியும் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.சமீபத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அனுப்பியுள்ள கேஸட்டில் வீரப்பன் கூறியுள்ள கோரிக்கைகள்நியாயமானவைதான். கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரின் உதவியுடன் இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நான்மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
இந்த கடத்தல் பிரச்சியைைக் காரணம் காட்டி தமிழர்களிடம் கர்நாடக மக்கள் வெறுப்புணர்வைக் காட்டவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சி பாராட்டும் வகையில் உள்ளது. தி.மு.ககூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடரும். தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடத்தினால்வரவேற்கத்தக்கது.
தமிழக்கத்தில் கிராமங்கள் தோறும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தேவையில்லாதது.அதற்கு ஆகும் செலவை, மருத்துவம் மற்றும் கல்விச் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications