கொலை வழக்கை வாபஸ் பெறக் கோருகிறார் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என் மீது போடப்பட்டுள்ள கொலை வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும் என்று புதியதமிழகம் கட்சியியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாஞ்சோலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த வன்முறைக்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அந்த சம்பவம் தொடர்பாக என் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாரோ சிலரது தூண்டுதலின்பேரில் என் மீது இந்த பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவழக்கில் என்னைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சந்திக்க நான் தயாராக உள்ளேன். இந்த மண்ணில் பிறந்த நான் எங்கும் ஓடிப்போகமாட்டேன். நீதிமன்றத்தில் இருந்து இதுவரை எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை.

என் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும் என்று நான் மீண்டும்கேட்டுக் கொள்கிறேன். என்னைக் கைது செய்யவேண்டும் என்று கூறுவதில் பின்னணியும், மர்மமும்உள்ளது.

இவ் விஷயத்தில் ஒரு மதம் பின்னணியாகச் செயல்படுகிறது. என் மீது வழக்கு போட்டுள்ள அந்தோணிஅம்மாளுக்குத் துணை போகும் சக்தியை விரைவில் நான் அடையாளம் காட்டுவேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்குப் புதிய தமிழகம்ஒருபோதும் துணை போகாது என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+