ராஜ்குமார் பத்திரமாக இருக்கிறார் ...தமிழக டிஜிபி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் பாதுகாப்பாகவும், நலமாகவும்இருப்பதாக தமிழக டிஜிபி எப்.சி.சர்மா தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். வீரப்பனின்கோரிக்கையை ஏற்று அவர் அவரைச் சந்திக்க நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றுள்ளார்.
வீரப்பனைச் சந்தித்த அவர், பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், வீரப்பனின் கோரிக்கைகளுக்கு அரசுஅளித்த விளக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்த கேஸட்டையும், வீரப்பனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும்கோபால் அனுப்பியுள்ளார்.
தன்னுடன் காட்டுக்கு வந்த நக்கீரன் நிருபர் ஒருவரிடம் அந்தக் கேஸட்டையும், புகைப்படங்களையும் கோபால்அனுப்பியுள்ளார்.
புதன்கிழமை மாலை அல்லது வியாழக்கிழமை காலை கேஸட்டும், புகைப்படங்களும் வந்து சேரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரும், மற்ற 3 பேரும் பாதுகாப்பாகவும்,நலமாகவும் உள்ளனர்.
கோபால் அனுப்பியுள்ள கேஸட்டையும், புகைப்படங்களையும் பார்த்தபிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிஎதுவும் சொல்ல முடியும். மேலும் ராஜ்குமாரை வீரப்பன் விடுதலை செய்ய மேலும் சில காலம் ஆகும் என்றார்சர்மா.












Click it and Unblock the Notifications