பதவி, அரசியலை விட்டு விலகுகிறார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயகே, அரசியலிலிருந்து ஓய்வு பெறவும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரைப் பெற்றவர் பண்டாரநாயகே. இப்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார். 84வயதாகும் பண்டாரநாயகே, ஓய்வு பெற்றால், பிரதமர் பதவிக்கு பொது நிர்வாகத் துறை அமைச்சர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே நியமிக்கப்படலாம்என்று அரசுத் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

1960-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் ஆனார் பண்டாரநாயகே. மறுபடியும் 1970-ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 12ஆண்டுகள் அவர் இலங்கை பிரதமராக இருந்திருக்கிறார்.

அதிபர் சந்திரிகாவின் தாயாரன பண்டராநாயகே, தனது மகள் அரசில் பிரதமராக இருந்து வருகிறார். இது வெறும் அலங்காரப் பதவியே.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ள சூழ்நிலையில், தற்போது பண்டாரநாயகேவின் ஓய்வுச் செய்தி வெளியாகியுள்ளதால் இலங்கைநிலவரம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+