சஹாரா கப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளாது

Subscribe to Oneindia Tamil

கே: உச்ச நீதிமன்ற நீதிபதியை ராம் ஜெத்மலானி விமர்சித்து ஒருபுறம்இருக்கட்டும்; பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதாவை தலைமைநீதிபதி முன்பு சந்தித்த நிகழ்வு பற்றி...?

ப: அதுவும் தவறுதான். அதற்காக ஜெத்மலானி செய்த விமர்சனம் நியாமாகி விடாது.

கே: சந்தன வீரப்பனுடன் பேச பல நடிகர், நடிகைகைள் தயாராக இருப்து பற்றி...?

ப: அவசரப்பட வேண்டியதில்லலை. சந்தன வீரப்பனைப் பிடிக்க இரு மாநில அரசுகள் இதுவரை எடுத்து வந்திருந்த அக்கறையைப் பார்க்கும்போது -எல்லாருக்கும் வீரப்பனே அந்த சான்ஸ் தருவான் என்றுதான் தோன்றுகிறது.

கே: மத்திய அரசுக்குத் தெளிவான கொள்கை இல்லை - என்று மன்மோகன் சிங் கூறியுள்ளாரே?

ப: பல விஷயங்களில் அரசின் அணுகுமுறையைப் பார்க்கும் போது, இது பொருந்தக் கூடிய விமர்சனமே.

கே: காவல் துறையினர் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும் - என அமைச்சர் கோ.சி மணி கூறியுள்ளது பற்றி...?

ப: வாஸ்தவம்தான். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் அவர்களை தடுப்பது யார் என்பதையும் அமைச்சர் கூறியிருக்கலாம்.

கே:சங் ப்ரிவார் அமைப்புகளின் அடிப்படைக் கொள்கை நாட்டுப் பற்றே - என மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலம் கூறியுள்ளது பற்றி...?

ப:உண்மைதான். வெறும் அடிப்படைக் கொள்கையோடு நிறுத்திக் கொண்டிருக்க் கூடாதா? மற்ற கொள்கைகள் தேவைதானா?

கே; சிங்காரச் சென்னை உருவாக்கும் பணியில் தாம் பாஸ் மார்க் வாங்கிவிட்டதாக - மேயர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?

ப: அவருக்கு அவரே மார்க் போட்டுக் கொள்ளும் போது கூட, பாஸாகா விட்டால் எப்படி?

கே: சென்னை ஐ.ஐ.டி.க்கு முன்னாள் மாணவர் ஒருவர் 22 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளாரே? இது பற்றி தங்கள் கருத்து?

ப: பாராட்டுக்குரிய செயல். தான் படித்த கல்வி நிலையத்தின் மீது அவர் வைத்திருககும் மரியாதை வியப்பை அளிக்கிறது.

கே: மறைந்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் பற்றி...?

ப: அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைப் பெற்றவர். பழகுவதற்கு இனியவர்.

கே: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதற்காக. அங்கு வசிக்கும் தமிழர்களை அடித்து, உதைத்து அராஜகம் செய்வது சரியா?

ப:இது கன்டனத்துக்குரியது. இம்மாதிரி வெறியுணர்ச்சி தூண்டப்படுவது நல்லதல்ல.

கே: நாட்டில் வறுமை குறைந்து விட்டது என்று அரசு கூறிக் கொள்ளவும் முடி.யாது; அதே போல வறுமை அதிகரித்து விட்டது என்று மற்றவர்கள்கூறவும் முடியாது; என்று மக்களவையில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அளித்துள்ள விளக்கம் குறித்து?

ப:நிதி அமைச்சராக இருப்பவர்கள் தெளிவாகப் பேச வேண்டும் என்று எநதக் கட்டாயமும் கிடையாது.

கே:தமிழகத்தில் தற்போது 56 கட்சிகள்; 56 தலைவர்கள்; 56 கொடிகள்; 56 கோஷங்கள். ஆனால் இக்கட்சிகளில் வித்தியாசமான கட்சி பா.ம.க. என்று ராமதாஸ் கூறியுள்ளது பற்றி...?

ப:ஆமாம். எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று யாராலும் எளிதில் அனுமானித்துவிட முடியாதபடி செயல்படுவது அவர்களின் சிறப்பு.

கே: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா காந்தி எச்சரிக்கைவிடுத்துள்ளது பற்றி...?

ப: ஏன் இந்த விபரீத எண்ணம்? தமிழ்நாட்டில் கட்சிகக்கு யாருமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாரா?

கே: அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்று காளிமுத்து கூறுகிறாரே... அப்படி என்றால் த.மா.க.ா. அதற்கு வெளியில் இருந்தே ஆதரவுகொடுக்குமா?

ப: பின் என்ன, உள்ளிருந்தே கழுத்தறுக்கவா வாய்ப்பு கிடைக்கும்.

கே: நினைத்ததையெல்லாம் சொல்பவர்; கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்பவர்; சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவர் - அரசியலில்இவர்கள் யார்,யார் என்று சொல்ல முடியுமா?

ப: தொண்டர்; தலைவர்; பேச்சாளர்.

கே: சாகும் வரையில் ஒரு கம்யூனிஸ்ட் ஓய்வெடுக்க முடியாது என்கிறாரே ஜோதிபாசு?

ப: கடைசிவரை அடுத்தவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது.

கே: ஒரு மணி நேரம் உபதேசம் செய்வதை விட, ஒரு நிமிடம் உதவி செய்வது மேல் - என்ற மேலை நாட்டு பழமொழியைப் பற்றி என்னநினைக்கிறீர்கள்?

ப: பிச்சைக்காரர்கள் பெருகி விடுவார்கள்.

கே: இன்றைய அ.தி.மு..க.வினரின் நிலையைப் பார்த்தும் கூட, ஆளும் தி.மு.க. வினர் ஊழல் செய்வார்கள் என்று நம்புகிறீர்களா?

ப: ஆதாரம் வைத்துக் கொண்டு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

கே: காங்கிரசின் அழிவிற்குக்க காரணம், தலைமைக்கு கூஜா தூக்குவதுதான் -என்று ரங்கராஜன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளாரே?

ப:இது உண்மை என்று வைத்துக் கொண்டால், ரங்கராஜனுக்கும் இந்த பெருமையில் பங்கு உண்டு.

கே: காரத்தே வீரர் ஹூசைனி தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?

ப: ஹுசைனியின் பேச்சுக்கள் வரம்பு மீறியவையாக இருக்கின்றன என்றாலும், அவர் மீதான புகார்கள் விசாரிக்கப்படுவது போல, அவர் சுமத்தியுள்ளகுற்றச்சாட்டுகளும் பரீசீலன்ைகுரியவையே.

கே:அ.தி.மு.க. அணியில் பா.ம.க., ம.தி.மு.க. - ஆகிய இரு கட்சிகளும் மீண்டும் சேர்ந்தால், காங்கிரஸ் அதை எதிர்க்கும் - என்கிறாரேஈ,வி.கே.எஸ். இளங்கோவன்?

ப: ....ஆனால் ஜெயலலிதா அப்படி முடிவு செய்துவிட்டால், அந்த முடிவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் - என்பது அதில் புனைந்துள்ள கருத்து.

கே: சென்னை மாநகராட்சித் தேர்தலில் அ,தி.மு.க.விற்கு எதிராக எங்கள் வேட்பாளர்களை நிறுத்தியது ஃப்ரண்லி மேட்ச். வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் இத்தகைய மேட்ச் இருக்காது - என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது குறித்து...?

ப: மேட்ச் ஃபிக்சிங் இல்லாமல் இருந்தால் சரி.

கே: தி.மு.க. வின் நான்காண்டு கால ஆட்சி சிறப்பாக உள்ளது என்றும்; தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் ராமதாஸ்கூறியிருப்பது பற்றி...?

ப: இந்த அறிக்கை வெளியான அடுத்த நாள் அவர் என்ன ால்லியிருப்பாரோ? அவருடைய பேச்சில் மட்டும் அவசரப்பட்டு முடிவுக்கு வர முடியாது.

கே:அதிக சீட் பெறுவது பா.ம.க.வின் கொள்கை அல்ல என்று ராமதாஸ் கூறியிருப்பது குறித்து...?

ப:இருந்த ஒரே கொள்கையையும் விட்டு விட்டாரா அடக் கடவுளே!

கே: காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாற்று அணி உருவாகும் - என்று சந்திரசேகர் கூறியுள்ளது பற்றி...ய

ப:பயப்பட வேண்டாம். கம்யூனிஸ்டுகள், முலாயம் சிங் ஆகியோர் முறை முடிந்து விட்டது. இப்போது சந்திரசேகர், அடுத்து கன்ஷிராம் மாதிரி யாராவதுஆரம்பிக்கலாம். இது சம்பிரதாயமாக நடப்பதுதான். கவலைப்பட ஏதுமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+