18 கி.மீ. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த 16 வயது சிறுமி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காவேரி தாகூர் என்ற 16 வயது சிறுமி கடுங்குளிரிலும் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
தானேயைச் சேர்ந்த காவேரி தாகூர்தான், இதுவரை ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளவர்களில் மிகவும் இளைய வயதுடையவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நீண்ட தொலைவு நீச்சல் வீராங்கனையான காவேரி ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்கு 14.06 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டார். 18 கிலோ மீட்டர்உள்ள ஆங்கிலக் கால்வாயை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார் காவேரி.
ஏற்கனவே, கடந்த ஜூலை 19 ம் தேதி ஜிப்ரால்டர் ஜலசந்தியை கடந்து, குறுகிய நேரத்தில் நீந்திக் கடந்து, ஆசியாவின் அதி வேக நீச்சல் வீராங்கனைஎன்ற பெயரை பெற்றார் காவேரி என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications