"தமிழக அரசிடமிருந்து தகவல் இல்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் விடுதலை குறித்து தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்று கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தலைமையில் பெங்களூரில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே, தலைமை செயலாளர் பட்டாச்சாரியா, உள்துறை செயலாளர் பிரகாஷ், டி.ஜி.பி.தினகர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து

கொண்டனர்.ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் நிருபர்களைச் சந்தித்த முதல்வர் கிருஷ்ணா, ராஜ்குமார் விடுதலை குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

தமிழக அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் எனக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்து நான்கு நாட்கள் ஆகி விட்டன.ஆனாலும் வீரப்பனிடமிருந்து கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாகவோ, அல்லது புதிய கோரிக்கை குறித்தோ எந்த விதத் தகவலும் வரவில்லை.

நடிகர் ராஜ்குமாரை மீட்க அனுப்பப்பட்ட அரசு தூதரிடமிருந்து எந்த விதத் தகவலும் வராதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+