மனைவியுடன் தகராறு செய்தவரை சுட்டுக் கொன்ற விவசாயி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இரு விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒருவரது உயிரும் பறிபோனது.
தமிழகத்தின் தேனி மாவட்டம் சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் (48). கே.எஸ்.பாண்டியன் (51). இருவரும் விவசாயிகள்.
பாண்டியனுக்கும், குணசேகரனின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை இரவும்இவர்களுக்கிடையே தகராறு ஏறபட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், வீட்டிலிருந்த இரட்டைக் குழல் துப்பாகியை எடுத்து வந்து பாண்டியனை சுட்டுள்ளார். இதில் பாண்டியன் குண்டுபாய்ந்து இறந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து சென்று குணசேகரனைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications