மாஜி மந்திரி செங்கோட்டையன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
ஜீவா போக்குவரத்து ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்து அமைச்சர்செங்கோட்டையனுக்கும், மேலும் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தின்போது செங்கோட்டையன் போக்குவரத்து அமைச்சராக இருந்தசமயம் ஜீவா போக்குவரத்து சார்பில்பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் வங்கியது, பயணச்சீட்டுக்கள் அச்சடித்தல் ஆகியவை தொடர்பாக ரூ 2.18 கோடி ஊழல் நடந்துள்ளதாக இவர் மேல்குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த முதலாவது தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், செங்கோட்டையன், அவருக்கு உடந்தையாயிருந்த ஜீவாபோக்குவரத்து நிர்வாக இயக்குநர் வீரப்பன், கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த நடராஜன் ஆகிய மூன்று பேருக்கும், நான்கு ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையாக செங்கோட்டையனுக்கு 1, 05,000 ரூபாயும், வீரப்பனுக்கும், நடராஜனுக்கும் 92,000 ரூபாயும் கட்ட வேண்டும் என்றும் தனதுதீர்ப்பில் கூறியிருந்தார். தீர்ப்பையடுத்து மூன்று பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்தத் தண்டனையை எதிர்த்து செங்கோட்டையனும்,தண்டனை பெற்ற மேலும் இரண்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கும் ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.
அவர்கள் மூன்று பேரும் தலா ரூ 50, 000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு 2 நபர் ஜாமீனும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications