கோவை-சென்னை விமானத்தில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பெரும் பதற்றம்ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், சென்னையிலிருந்து 12.05 க்கு கோவைக்கு வந்த விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகவும், விமானம் மீண்டும் 12.35 க்கு சென்னை திரும்பும்போது அது வெடிக்கும் என்றும் கோவை விமானநிலையத்துக்குதொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்ப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
விமானத்தில் வெடிகுண்டோ, வெடிப்பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. தீவிர சோதனைக்குப்பின் விமானம் 4.30 க்கு கோவையிலிருந்துசென்னைக்குக் கிளம்பிச் சென்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications