மீண்டும் காட்டுக்குப் போவார் கோபால்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் கடத்தப்பட்டபிரச்சனயில் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதியும்,கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் கூறினர்.

வீரப்பனைச் சந்தித்துவிட்டு சென்னை வந்த நக்கீரன் கோபால், வீரப்பனின் புதியகோரிக்கைகள் அடங்கிய வீடியோ கேஸட்டை இரு மாநில முதல்வர்களும் பார்த்தனர்.பின்னர் கோரிக்கைகள் குறித்து 3 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கருணாநிதி:

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல்வீரப்பனைச் சந்தித்துவிட்டு நக்கீரன் கோபால் சென்னை திரும்பினார்.

என்னையும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்து விவரங்களைத்தெரிவித்தார்.

காட்டுக்குள் வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரும் மற்றவர்களும் நலமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு அடையாளமாக அவர் ஒரு வீடியோ கேஸட்கொடுத்தார்.

அதைப் பார்த்தோம். ராஜ்குமாரும் மற்றவர்களும், கோபாலுடன் மகிழ்ச்சியாகஉரையாடிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் அதில் உள்ளன.

இந்நிலையில், வீரப்பனுடைய 10 கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழக, கர்நாடகஅரசுகளின் சார்பாக தரப்பட்ட விவரங்களையும், பதில்களையும் படித்துப் பார்த்துஅந்த கோரிக்கைகளோடும், மேலும் இரண்டொரு கோரிக்கைகளையும் வீரப்பன்எழுப்பி இருக்கிறார்.

கோரிக்கைகள் அடங்கிய காகிதத்தில் வீரப்பன் குழு, தமிழர் தேசிய விடுதலைப் படை,தமிழ் மீட்புப் படை சார்பில் என்று வீரப்பன் கையெழுத்திட்டுள்ளார்.

வீரப்பன் தெரிவித்துள்ள கோரிக்கைகள் பற்றி நானும், கிருஷ்ணாவும் விவாதித்தோம்.அதில் சிலவற்றை நிறைவேற்றமுடியாது.

வீரப்பனின் கோரிக்கைகள் பற்றியும், அதற்கு இரு மாநில அரசுகளின் பதில்களைப்பற்றியும் நக்கீரன் கோபாலிடம் பேசியிருக்கிறோம். புதிய கோரிக்கைகளுக்கானபதில்களுடன் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் மீண்டும் காட்டுக்குள் செல்லஇருக்கிறார்.

அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களில் அவர் காட்டுக்குச் செல்வார்.

இரு மாநில அரசுகளின் பதில்கள் குறித்து வீரப்பனிடம் நக்கீரன் கோபால் பேசுவார்.விரைவில் இப் பிரச்சினையில் நல்ல முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

வீரப்பனுடன் இருப்பவர்கள்தான் இத்தகைய கோரிக்கைகளை சொல்லிக் கொடுத்துகேட்கச் சொல்லியிருக்கின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதைவீரப்பனிடம் கோபால் விளக்கிச் சொல்வார்.

புதிய கோரிக்கைகளுக்கான பதில்களுடன் தன்னை மீண்டும் 8 நாட்களுக்குள் சந்திக்கவேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ளார். இப் பிரச்சினையில் காலதாமதம்ஏற்படுத்துவதற்காக புதிய கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்திருப்பதாகத்தெரியவில்லை.

அவரைச் சுற்றியுள்ள தமிழ் தீவிரவாத கும்பல்தான் இக் கோரிக்கைகளை அவருக்குச்சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் விரைவில் விடுவிப்பார் என்ற நம்பிக்கைஎங்களுக்கு விட்டுப் போகவில்லை.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். வீரப்பன் ஏற்கெனவே தெரிவித்தகோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளும் அளித்த பதிலில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் வீரப்பன் கூறியுள்ளார் என்றார் கருணாநிதி.

எஸ்.எம். கிருஷ்ணா:

ராஜ்குமார் கடத்தல் பிரச்சினையில் சிறிது ன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.இப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன்.

காட்டுக்குள் வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரும் மற்றவர்களும் உடல் நலத்துடனும்,மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். இதைக் கேட்ட பிறகு எங்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியாக உள்ளது.

வீரப்பனின் புதிய கோரிக்கைகள் குறித்து தமிழக தல்வருடன் கலந்துபேசியிருக்கிறேன். எல்லோரும் பொறுமையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்என்றார் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+