கோவை த.மு.மு.க. தொண்டர் கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக பகுதிச் செயலரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துகோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 97 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நடந்த கொலை சம்பவத்தைகண்டித்து கோவையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜனவரி 30ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்தது.
இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருந்தனர். துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். பந்த்அறிவிக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி 2ம் தேதி தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக பகுதிச் செயலர் சம்சுகனி மற்றும்பிரேம் நிசீர் ஆகியோர் ரத்தினபுரியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பிரேம் நசீர் டீ சாப்பிட கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சம்சுகனியைப் பார்த்த இந்துமுன்னணியைச் சேர்ந்த மில்கி (21), விக்னேஷ் என்ற கணேசன் (24), ராஜ்மோகன் (24), சோமன் (எ) சோமசுந்தரம்(20) ஆகியோர் சம்சுகனியை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதில் அதே இடத்தில் சம்சுகனி இறந்தார். இதனைக் கண்ட பிரேம் நசீர் அங்கு ஓடி வந்துள்ளார். அப்போதுவிக்னேஷ் அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பிரேம் நசீர் காயத்துடன் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சாயிபாபா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் தப்பிச் செல்லஉதவியதாக சிவலிங்கம் (26), பாபு (24), ஆகியோரையும் சேர்த்து 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி பூபாலன்,குற்றம் நிரூபிக்கப்பட்ட மில்கி, சோமன், ராஜ்மோகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.விக்னேஷ் என்ற கணேசனுக்கு ஆயுள் தண்டனையுடன் மேலும் மூன்று ஆண்டுகள் கூடுதல் தண்டனை அளித்துதீர்ப்பளித்தார்.
சிவலிங்கம் மற்றும் பாபு ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications