சியோரா லியோன் குற்றங்கள்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்:

சியோரா லியோனில் நடக்கும் குற்றங்கள், அங்கு வாழும் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் ஆகியவற்றை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்அமைக்க ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.

சியாரோ லியோன் அரசுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி படை தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 9 வருடங்களாக சண்டை நடந்து வருகிறது. மேமாதம் சண்டை உச்சக் கட்டத்தை அடைந்தது.

இங்கு பல வருடங்களாக நடந்து வரும் சண்டையில் இதுவரை பலர் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதம் 500 க்கும் மேற்பட்ட அமைதி காக்கும்படையினரை புரட்சிகர ஐக்கிய முன்னணி படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்

இதையடுத்து அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை சியாரோ லியோன் அனுப்பப்பட்டது. இதில், இந்திய ராணுவவீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வாழும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பல கொடுமைகளும், குற்றங்களும் நடக்கின்றன.

இந்தக் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் அங்கு செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியினர் தான் காரணம்என்று சியோரா லியோன் அரசு நம்புகிறது.

இதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை விசாரிக்கும் வகையிலும் தலைநகர் ஃப்ரீடவுனில் சிறப்பு நீதிமன்றம்அமைக்க வேண்டும் என்று அதிபர் அகமத் டெஜாஜ் ஐ.நா.வுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இதை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னன், சியோரா லியோனில் நடக்கும் குற்றங்களை விசாரிக்கசிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா.ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. ஐ.நா.வில் இடம்பெற்றுள்ள நிபுணர்கள், சட்ட வல்லுநகர்கள் அடங்கிய குழுவிரைவில் தலைநகர் ஃப்ரீடவுன் சென்று சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கும் என்றார்.

முன்னதாக, சியோரா லியோனில் நடக்கும் சண்டையைச் சமாளிக்க ஐ.நா. இதுவரை 13, 000 க்கும் மேற்பட்ட அமைதிகாக்கும் படையினரைஅனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+