ஹிஸ்புல் முஜாஹீதீன் வெறிச் செயல்: காஷ்மீரில் குண்டுவெடித்து 13 பேர் பலி
ஸ்ரீநகர்:
![]() |
| ஹிஸ்புல் முஜாஹீதீன் தீவிரவாத அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் |
ஹூஸ்புல் முஜாஹீதீன் தீவிரவாத அமைப்புடன் மத்திய அரசு நடத்தி வந்த பேச்சுவார்த்தை முறிந்த அடுத்த நாளில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததுள்ளது. ஒரு வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தையையொட்டி முஜாஹீதீன் அமைப்பு சண்டை நிறுத்ததம் அறிவித்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்குபாகிஸ்தானையும் அழைக்க வேண்டும் என அந்த அமைப்பு கூறியதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்துபேச்சுவார்த்தையில் இருந்து பின் வாங்கிய ஹிஸ்புல் அமைப்பு, இந்த வெடிகுண்டு வெறியாட்டத்தை நடத்தியுள்ளது.வெடிகுண்டு வைத்தது தாங்கள் தான் எனவும் ஹிஸ்புல் கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை முறிந்தபோதே இது போன்ற சம்பவங்கள், வன்முறை நடக்கலாம் என ராணுவம் எச்சரித்திருந்தது. இதற்காக பலபாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது.
ஆனால், இதையும் மீறி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எதிரே காரில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வியாழக்கிழமை மாலைவெடித்தது. இதில் 10 போலீசார், 2 ராணுவத்தினர், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் போட்டோகிராபர் பிரதீப் பாட்டியாஆகிய 13 பேர் கொல்லப்பட்டனர். 30 போலீசார்., ராணுவத்தினர் பேர் காயமடைந்தனர்.
முன்னதாக வங்கியின் வளாகத்துக்குள் ஒரு கிரனடையும் தீவிரவாதிகள் வீசினர்.
குண்டு வெடிப்பில் சி.என்.என். செய்தியாளர் சஸ்னி ஹைதர், ஆசியன் நியூஸ் இன்டர்நெசனல் செய்தியாளர் பயாஸ் அகமத்,ஏசியன் ஏஜ் பத்திரிக்கையின் நகாஷ், ஜீ டிவியின் இர்பான் அகமத் உள்பட பல நிருபர்களும் காயமடைந்தனர்.
இந் நிலையில் பாகிஸ்தானிலிருந்து வெளியான ஹிஸ்புல் முஜாகிதீனின் அறிக்கையில், பேச்சுவார்த்தை முறிந்ததால் தான் இந்தகுண்டு வைக்கப்பட்டது. இது எங்கள் தலைவர் சையத் சலாஹூதீனின் உத்தரவில் பேரில் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.இந்திய அரசு தொடர்ந்து எங்களை ஒதுக்கி வந்தால், தாக்குகள் தொடரும் எனவும் சையத் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி













Click it and Unblock the Notifications