பிஜி கலகத் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மீது விரைவில் தேசத்துரோக வழக்கு
வெல்லிங்டன்:
பிஜி தீவில், அனுமதியில்லாமல் ஆயுதங்களை வைத்திருத்தல், தேசதுரோகம் போன்ற குற்றங்கள் புரிந்ததற்காக புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட்டு மீது வழக்குத் தொடரப்பட்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தலைநகர் சுவாவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பைட்தலைமையிலான புரட்சிக்கும்பல் பிணைக்கைதிகளாகப் பிடித்து பாராளுமன்றத்தில் சிறைவைத்தது.
அதற்குப்பின் பிஜி தீவில் இந்தியர் ஒருவர் பிரதமராக இருக்கக் கூடாது, பிஜியின் பூர்வக் குடி மக்களே உயர் பதவியில் அமர வேண்டும் என்றகோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியது.
பிறகு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவத்துக்கும், புரட்சிக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் 56 நாட்களுக்குப் பிறகு பிரதமர்செளத்ரி உள்பட பிணைக்கைதிகள் அனைவரையும் புரட்சிக் கும்பல் விடுவித்தது.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அமைச்சர் ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் பிஜி தீவில் வாழும் இந்தியர்கள் மீதுதாக்குதல்கள் நடந்தது. இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் பலர் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்ற வண்ணம்உள்ளனர்.
இதற்கிடையே புரட்சிக்கும்பல் தலைவன் ஜார்ஜ் ஸ்பைட்டும், அவரது கும்பலைச் சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும், ஆகஸ்ட் 5 ம் தேதி நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போதுஅவர்களிடம் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அடுத்த கட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இவர்கள், தலைநகர் சுவாவிலுள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இவர்கள்மேல் தேச துரோக வழக்கு தொடரப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications