குடிநீர் ஏரியில் மாடுகளுடன் மனிதர்களும் குளியல்!
சென்னை:
சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்க போரூர் ஏரியில் உள்ள தண்ணீர்பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் பொது மக்கள் துணிை துவைப்பது,குளிப்பது, மாடுகளை குளிப்பாட்டுவது என்று சகலமும் நடந்து வருகின்றது.
இந்த தகவல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷீலாராணி சுங்கத்தின்கவனக்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஷீலாராணி சுங்கத், அதிகாரிகளோடுபோரூர் ஏரிக்கு சென்றார்.
அப்பொழுது பலர் குளித்துக் கொண்டும், மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டும்இருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷீலாராணி சுங்கத், பொதுமக்களின் குடிநீருக்காகபயன்படுத்தப்படும் இந்த ஏரியில் குளித்தால் என்ன அர்த்தம். இங்கு யாரும்குளிக்கவோ, துணிவைக்கவோ கூடாது. ஏரியை பாதுகாப்பது நமது கடமை என்றுமக்களிடம் எடுத்துக் கூறினார்..
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், பெருநகர குடிநீர் வாரியஅதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து போர்டு தலைவருக்கும் இது குறித்து தகவல்கொடுத்தார்.
போரூர் ஏரியில் பொது மக்களோ, கால்நடைகளோ குளிக்கக் கூடாது. இதைமீறிகுளிப்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல்கட்டமாக, நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு போரூர் ஏரியில் யாரும்குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் விளம்பர போர்டுகள் வைக்க ஷீலாராணிசுங்கத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கையை மீறி போரூர் ஏரியில் குளிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் ஆறுமாதம் சிறைத்தண்டனையாைை,அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இதுதவிர, தண்ணீர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் ஒன்றரை ஆண்டு முதல் ஆறுஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஷீலாராணிசுங்கத் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications