வீரப்பனின் புதிய நிபந்தனைகளும் இரு அரசுகளின் பதில்களும்...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்குப் புதிய கோரிக்கைகளை சந்தனக் கடத்தல் வீரப்பன் கூறியுள்ளான்.

தன்னைச் சந்தித்த நக்கீரன் கோபாலிடம் கொடுத்தனுப்பிய கேஸட்டில் அவன் இக் கோரிக்கைகளை கூறியுள்ளான்.

வீரப்பனின் புதிய கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.

கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனை நடத்தி பதில் அளித்துள்ளனர்.

புதிய கோரிக்கைகளுக்கான பதில்களை எடுத்துக் கொண்டு வீரப்பனைச் சந்திக்க கோபால் மீண்டும் காட்டுக்குள்செல்லவிருக்கிறார்.

வீரப்பனின் புதிய கோரிக்கைகளும், அதற்கு இரு மாநில அரசுகளும் அளித்துள்ள பதில்களும் வருமாறு(பதில்களை தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்):

வீரப்பனின் கோரிக்கை 1: காவிரிப் பிரச்சினையை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, இடைக்கால தீர்ப்பு, பிரதமர்தலைமையிலான காவிரி ஆணையம் ஆகிவற்றின் மூலம் தீர்க்கத் தேவையில்லை. மேலும், 4 மாநில முதல்வர்களும்கலந்து பேசியும் எந்த முடிவும் எடுக்கவேண்டாம். காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூறவேண்டும்.

இரு மாநில அரசுகளின் பதில்: காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்என்பது முடியாத காரியம்.

கோரிக்கை 2: கர்நாடக சிறைகளில் உள்ள தடா கைதிகளை விடுவிக்க அம் மாநில அரசு ஒப்புக்கொண்டுஅதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதுபோல, தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை,தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

விடுவிக்கப்பட்ட 5 பேரையும் காட்டுக்குள் கொண்டு வந்து விடவேண்டும்.

பதில்: வீரப்பன் குறிப்பிட்டுள்ள 5 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளோம். ராஜ்குமாரை மீட்கும்நடவடிக்கையின்போது அவர்களையும் விடுவிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

கோரிக்கை 3: வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்ட ஈடு தரவேண்டும்.

பதில்: வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்கள் கடந்த கால ஆட்சியில் நடந்தது. அந்த ஆட்சிக்காலத்திலேயே அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டுவிட்டது.

கோரிக்கை 4: தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்.

பதில்: ஏற்கெனவே 5-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு வரையோ, 12-ம் வகுப்பு வரையோ தமிழ் வழிக் கல்வியைக் கட்டாமாக்குவதுஎன்பது சட்டப் பிரச்சினை. அது தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர வழி இருக்கிறதா என்பதை முதலில்பார்க்கவேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+