விரைவில் 3 புதிய மாநிலங்கள்: நாடாளுமன்றம் ஒப்புதல்
டெல்லி:
பிகார் மாநிலத்தைப் பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில்வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிகாரின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களை அடக்கிய ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கும்பணிகள் முடுக்கிவிடப்படும்.
ராஜ்யசபையில் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்த மசோதா மீதுவிவாதம் நடந்து வந்தது. புதிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 மாவட்டங்கள் இருக்கும்.
மசோதா நிறைவேற்றப்பட்ட பின் பேசிய உள்துறை அமைச்சர் அத்வானி, நவம்பர் 1ம் தேதி பிகாரைப் பிரித்துஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து உத்தராஞ்சல், மத்தியப் பிரதேசத்தைப் பிரித்து சட்டீஸ்கர் ஆகியமாநிலங்கள் உருவாக்கப்பட்டுவிடும் என்றார். இந்த 3 மாநிலங்களையும் உருவாக்க மசோதாக்கள்நிறைவேற்றப்பட்டுவிட்டன.
ஜார்க்கண்ட் மாநில மசோதா தான் இறுதியாக நிறைவேறியது. மற்ற இரு மாநிலங்களை உருவாக்குவதற்கானமசோதாக்களும் முன்பே நிறைவேறிவிட்டன.
இது இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றார். புதிய மாநிலங்களின் பொருளாதாரவளர்ச்சிக்கும், தடுமாறிக் கொண்டிருக்கும் பிகாரின் பொருளாதார வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications