வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
குவஹாட்டி:
வட கிழக்கு மாநிலங்களில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி போராட்டம் நடத்துமாறு தீவிரவாதிகள் அழைப்புவிடுத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணிகளில் 50,000 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எண்ணெய் வளம், தேயிலை, மூங்கில் வளம் கொண்ட வடகிழக்கு மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்துவருவதாகக் கூறி இந்த போராட்டத்துக்கு தீவிரவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
உல்பா, தேசிய நாகாலாந்து கவுன்சில், மனிப்பூர் மக்கள் படை ஆகியவை இந்த போராட்டத்தை நடத்துமாறுஅழைப்பு விடுத்துள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் இணைந்தவை அல்ல. எனவே, சுதந்திர தினம்கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவை கூறியுள்ளன.
இது தவிர சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் இந்ததீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து ராணுவம், போலீஸ், பாரா மிலிட்டரி படைகள் ஆகியவை தீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளன. எண்ணெய் ஆலைகள், ரயில்கள், பாலங்களுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பூடான், பங்களாதேஷ், மியான்மார், சீனாவை ஒட்டியுள்ள இந்த மலை மாநிலங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்துதாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆண்டுகளாகவே இங்கு தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளன.இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் மிகப் பழைய தீவிரவாத அமைப்பு தேசிய நாகாலாந்து கவுன்சில். இது தனி நாகாலாந்து நாடு கேட்கிறது.சிறிது காலத்துக்கு முன் சண்டை நிறுத்தம் அறிவித்துவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது.
உல்பா தீவிரவாதிகள் சமீபத்தில் தான் இரு ரயில்களில் குண்டு வைத்தனர். இதில் 12 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக தீவிரவாதிகள் அசாமின் பல பகுதிகளிலும் ஊடுருவியிருப்பதாகவும்அவர்கள் சுதந்திர தினத்தன்று தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் எனவும் ராணுவம் எச்சரித்துள்ளது.
திரிபுராவில் தொடர்ந்து இனக் கலவரம் ஏற்பட்டு வருகிறது. இங்கும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications