ராஜ்குமார் விடுவிப்பில் தாமதம்: பீதியில் பெங்களூர் தமிழர்கள்
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் இன்னும் விடுதலையடையாததால் பெங்களூர் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.
நகரின் முக்கியப் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனால்கடந்த ஜூலை 30 ம் தேதி நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.
அவர்கள் நான்கு பேரும் கடத்தப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. கர்நாடகம், தமிழ்நாடு சார்பில்வீரப்பனுடன் பேசி ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரை மீட்டுக் கொண்டு வருவதற்காக இரு மாநிலங்களின் அரசுத்தூதராக நக்கீரன் கோபால் காட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் வீரப்பனுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையே வீரப்பனின் 10 நிபந்தனைகளுக்கு இரு மாநிலஅரசுகளும் பதில் கூறி விட்டன.
அரசின் பதில்கள் ரேடியோவில் திரும்ப, திரும்ப அறிவிக்கப்பட்டதன் மூலம் வீரப்பனுக்குச் சேர்ந்திருக்கும் என்றுநம்பப்படுகிறது.
இருப்பினும் ராஜ்குமார் விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் அரசுத் தூதர் நக்கீரன் கோபால்,ராஜ்குமார் பேசிய ஆடியோ கேசட் மற்றும் சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் ராஜ்குமார் விடுதலையடைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.பெங்களூரில் ராஜ்குமார்ரசிகர்கள் பதட்டமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடத்தப்பட்ட தினத்தில் நடந்த வன்முறை, பீதி ஓயாத நிலையில், ராஜ்குமார் விடுவிக்கப்படுவதுதாமதமாகும் ஒவ்வொரு நாளும் மக்களிடையே நிம்மதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி கேசட் வந்தால்மட்டும் போதுமா? எப்போது ராஜ்குமார் வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பதட்டத்தை தணிக்கவும், மக்களிடம் காணப்படும் பீதியைப் போக்கவும் முக்கிய நகரங்களில் கூடுதல் போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிரடிப் படை போலீஸார் ஆயுதங்களுடன் நகரை ரோந்து சுற்றி வருகின்றனர். முன் எச்சரிக்கையாக பலரைபோலீஸார் கைது செய்து வருகின்றனர்.
கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள போலீஸார்பதட்டமான பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications