ரூ. 26 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்
திருச்சி:
திருச்சியில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், திருச்சி அய்யப்பசாமிகோவில் ரோட்டில் ரோந்து சென்றார்.
அப்பொழுது சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை விசாரித்தார். நாகப்பட்டனத்தைச்சேர்ந்த ராஜாராம் என்கிற அந்தவாலிபரிடம் பத்து கிராம் ஹெராயின் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்த போதை பொருள் கடத்தும் மேலும் இருவர் சேலத்தில்இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சேலம் விரைந்த போலீசார் அங்கு ஒருஓட்டலில் தங்கியிருந்த மணி, செல்வம் என்கிற இருவரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 250 கிராம் ஹெராயினை கைப்பற்றினார்கள்.
இந்த மூவரிடமும் தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார் இன்னும் பலர் இந்தவழக்கில் சிககுவார்கள் என்கிறார்கள். இவர்களிடம் பிடிபட்ட ஹெராயினின் மதிப்புஇருப்த்தியாறு லட்சம் ரூபாய்.
மூவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
