புதிய அரசியல் சட்டதிருத்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்: சந்திரிகா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை அமல் படுத்துவதில் தற்காலிகமாக தோல்வி ஏற்பட்டாலும் கண்டிப்பாக சட்டதிருத்தத்தை அமல் படுத்தியேதீருவேன் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினர்.

தலைநகர் கொழும்பில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையிலும்புதிய அரசியல் சட்டதிருத்த மசோதா உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சி, புத்தபிட்சுக்கள், தமிழர்கட்சிகள், மற்றும் சிங்கள அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவைஅமல்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. புத்தபிட்சுக்கள் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்தசட்டதிருத்தம் நாட்டையே பிரிவினைக்குள்ளாக்கும் என்றனர். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. இது தற்காலிகமானதோல்விதான்.

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 24 ம் தேதி நள்ளிரவு கலைக்கப்படுகிறது. அதற்குள் மசோதாவை அமல் படுத்துவதற்கான முயற்சியில் இறங்குவேன்.அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மசோதாவுக்குஆதரவு தெரிவித்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமுன் மசோதாவிற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அடுத்த வரும் பொதுத்தேர்தலில் கண்டிப்பாய் ஆளும் கட்சியான மக்கள் கட்சியே வெற்றி பெறும். அப்போது, உடனடியாக புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா அமல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

மசோதா நிறைவேற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்தான் வாக்கெடுப்புஒத்திவைக்கப்பட்டது என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார் அதிபர் சந்திரிகா.

முன்னதாக, ஆகஸ்ட் 3ம் தேதி சட்டம் மற்றும் அரசியல் விவகாரத்துறை அமைச்சர் பெரிஸ் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 7 ம் தேதி மசோதா மீதான விவாதம் நடந்தது. 9 ம் தேதி நடக்கவிருந்த வாக்கெடுப்பு எதிர்க்கட்சி உள்பட பல்வேறு சிங்கள அமைப்புக்களின்எதிர்ப்பால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் சந்திரிகாவின் மக்கள் கட்சிக்கு 111 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதா மீதான வாக்கெடுப்பில்சந்திரிகா அரசு 150 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டும். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 7 எம்.பி.க்கள் சட்டதிருத்தமசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர். தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவை அமல்படுத்துவதில்சந்திரிகா அரசு அவசரம் காட்டுகிறது என்று குற்றம் சாட்டினர்.

புத்த பிட்சுக்கள், பழைய அரசியல் சட்டத்தில் உள்ளது போல், புதிய அரசியல் சட்டதிருத்தத்தில் தங்களுக்கு அதிக அதிகாரமோ, சலுகைகளோ இல்லைஎன்று கூறி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அவர்களது எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்தினால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகஅறிவித்தார்.

பிளாட், டி.யூ.எல்.எஃப் போன்ற அமைப்புக்களும் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாக்கெடுப்பில் வெற்றி பெற சந்திரிகா அரசு,எதிர்க்கட்சிகளை விலைகொடுத்து வாங்குகிறது என்றும் பிற கட்சிகள் ஆளும்கட்சியினரைக் குற்றம்சாட்டினர்.

இதனால் புதிய அரசியல்சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+