16-ம் தேதி மீண்டும் காட்டுக்கு செல்கிறார் கோபால்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கு, அரசு தரப்பிலிருந்து நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கங்களுடன் நக்கீரன் கோபால் மறுபடியும் காட்டுக்குச் செல்கிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீரப்பனின்புதிய நிபந்தனைகளுக்கு வரும் 19-ம் தேதிக்குள் வந்து பதில் சொல்லுமாறு வீரப்பன் கேட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், வீரப்பனை சந்திக்க கோபால் வரும் 16-ம் தேதி காட்டிற்குள் செல்வார் என்று சொல்லப்படுகிறது.வீரப்பனிடம் கோபால் நேரடியாக இரு மாநில அரசுகளின் விளக்கத்தை எடுத்துக் கூறுவார்.
அந்த விளக்கங்களில் வீரப்பன் திருப்தியடைந்தால் ராஜ்குமார் விடுவிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications