சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு இரங்கல் ஊர்வலம் நடத்த அனுமதி
சென்னை:
தப்பி ஓட முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் மறைவுக்கு அமைதி ஊர்வலம்செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தீவிரவாதி ரவீந்திரன், போலீசாரின்பிடியிலிருந்து தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணத்துக்கு அமைதி ஊர்வலம் நடத்தஅனுமதிக்கவேண்டும் என்று பழனி பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அமைதி ஊர்வலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து நீதிபதி பத்மநாபன் அளித்த தீர்ப்பு விவரம்:
புதுப்பட்டியில் இருந்து பெண்ணாகரம் பஸ் நிலையம் வரை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் ஆகஸ்ட் 22-ம்தேதி அமைதி ஊர்வலம் நடத்தலாம். ஊர்வலத்தில் கோஷம் ஏதும் போடக்கூடாது.
கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. ஊர்வலத்தில் ரவீந்திரனின் படம் எடுத்துச் செல்லலாம். 6அடி நீளம் ஒன்றரை அடி அகலமுள்ள துணி பேனரை எடுத்துச் செல்லலாம்.
ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் அதற்கு அமைதிஊர்வலம் நடத்துபவர்கள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications