பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்கிறது பா.ஜ.க.
சென்னை:
எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என பாரதீய ஜனதா கட்சியின்பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பன் பிடியில் இருந்து ராஜ்குமாரை உடனடியாக மீட்க வேண்டும். இரு மாநில முதல்வர்களுக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் ஆற்றல்இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசும் உதவ தயாராக இருக்கிறது.வீரப்பன் விஷயத்தில் கண்டபடி பேசி பிரச்சனையை யாரும்சிக்கலாக்கவேண்டாம்.
காஷ்மீர் பிரச்சனை தற்பொழுது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இப்பிரச்சனை பாரதீய ஜனதாஅரசு ஆட்சிக்கு வந்த பொழுது உருவான பிரச்சனையல்ல.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் சமீபத்தில் நடந்தபடுகொலைகளைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடந்த பாக்கிஸ்தான் கேபினட் கூட்டம், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவுஅளிக்கப்படும் என்ற முடிவை எடுத்தது.
இதன் மூலம் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் சதி வேலைகளை தற்பொழுது உலகநாடுகள் உணர்ந்து கொண்டுவிட்டன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இப்பிரச்சனையில் இந்தியாவை முமையாக ஆதரிக்கின்றன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் புரியும்விஷமச் செயல்களை சீனா கூட ஆதரிக்கவில்லை.
நிலைமையை புரிந்து கொண்டுள்ள சோனியா காந்தி கூட தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய அரசுக்கு பக்கபலமாக இருப்போம் என்று கூறியுள்ளார்.அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பிரச்சனையை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் மற்ற கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு பக்கபலமாக நிற்கவேண்டும்.ஏற்கனவே உலக நாடுகளால் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்படவேண்டும்.
அப்படி ஒரு நிலைமை உருவானால்தான் காஷ்மீரில் மூக்கை நுழைப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் என்றார் வெங்கைய்யா நாயுடு.












Click it and Unblock the Notifications