2 வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
கோவை:
கோவையில் இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைநடந்தது.
வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் இந்தக் குழந்தையின் பெயர்ஏஞ்சல் சிந்தே. இந்தக் குழந்தையின் உடல் சிறிது காலமாக நீல நிறத்தில் இருந்துவந்தது.
இந்த நோய் பற்றி பெற்றோர்களுக்கு எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துவந்தது. பின்னர் இந்த நோய் குறித்து தெரிய வந்தபோது சிகிச்சைக்கு போதியநிதியுதவியும் இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து, ஒரு சமுக நல அமைப்புத் தொண்டர் மூலம், கோவை ராமகிருஷ்ணாமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இக்குழந்தையைப் பரிசோதனை செய்தடாக்டர்கள், குழந்தையின் இருதயத்தில் தூய்மைப்படுத்தப்பட்ட ரத்தத்துடன் அசுத்தரத்தமும் (ஆக்சிஜன் இல்லாத ரத்தம்) ஒன்றாக கலப்பதை கண்டறிந்தனர்.
இதனால் ரத்தத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் அந்தக் குழந்ததைஅவதிப்பட்டு வந்தது. எனவே, இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்தனர்.
இருதய வால்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு குழந்தையின் இருதயக் குறைபாடு சரிசெய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications