சர்வதேச தரத்தில் தேயிலை உற்பத்தி செய்தால் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

கோவை:

சர்வதேச தரம் வாய்ந்த தேயிலை உற்பத்திக்கு 80 சதவீத அளவிற்கு நிதியுதவிகிடைக்கும் என கருத்தரங்கில் குன்னூர் தேயிலை வாரிய மண்டலத் தலைமை அதிகாரிவிக்ரம் கபூர் கூறினார்.

கோவையில் நடந்த தேயிலைக் கருத்தரங்கில் விக்ரம் கபூர் பேசியதாவது:

அடுத்த சில ஆண்டுகளில் அமலுக்கு வரவிருக்கும் சர்வதேசப் பொருளாதாரதாரளமயமாக்கல் மூலம் தேயிலைத் தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்புஏற்பட்டு வருகிறது.

இதில், தேயிலையின் அளவை விட, தரத்திற்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.எனவே, சர்வதேச தரச் சான்றிதழ் (ஐஎஸ்ஓ) பெற, தேயிலைத் தொழிற்சாலைகள்மற்றும் விவசாயிகள் முன் வர வேண்டும்.

தேயிலைத் தோட்டங்களை சர்வதேச அளவிற்கு உயர்த்த, அரசு 80 சதவீத நிதியுதவிஅளிக்க முன் வந்துள்ளது. எனவே, இனி வரும் புதிய பொருளாதாரச் சந்தையில் இடம்பிடிக்க, தர மேம்பாடு அவசியம்.

இதற்கென அரசு சிறு தொழிற்சாலைகள் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளிடையேமேற்கொண்டுள்ள தேயிலைத் தர மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமான திட்டமாகும்.

நீலகிரியில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் 30 ஆயிரம் பேருக்கு இதுவரை ரூ. 1.17கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விக்ரம் கபூர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+