சான்றிதழ் விவகாரம்: தலித் அரசு ஊழியர் பதவி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும்எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகத்திலிருந்து டிகிரிச் சான்றிதழ் வாங்கி அதைக் காட்டி வேலையில்சேர்ந்ததாகக் கூறி அந்த ஊழியர் கடந்த 4ம் தேதி பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு அனைத்து தலித் அமைப்புகளின் கூட்டுப் போராட்டக் குழு கடும் கணடனம் தெரிவித்துள்ளது. இந்தஅமைப்பின் தலைவர் வி.பி.எம். சாமி கூறுகையில், இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசதிட்டமிட்டுள்ளோம்.
இந்தப் பிரச்சனையை முதல்வர் தீர்க்காவிட்டால், தலித் ஊழியர்கள் அனைவரும் வரும் சுதந்திர தினத்தன்று கறுப்புபேட்ஜ் அணிவோம். போராட்டத்தில் இறங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications