தடையை மீறி வினாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி திட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இந்து முன்னணியின் மாநில அளவிலான நிர்வாகக் குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் ராமேஸ்வரத்தில் கோசுவாமிமடத்தில் நடந்தன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தில், தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரை பரிபூரண சுதந்திர வினாயகர் ஊர்வலம் அனைத்து இடங்களிலும் நடைபெறும்.

ஆனால், சென்னை திருவல்லிக்கேணி, திண்டுக்கல் பேகம்பூர், தாராபுரம், சத்தியமங்கலம், கோவை, கும்பகோணம்ஆகிய இடங்கில் மசூதிகளைக் காரணம் காட்டி கடந்த 3 ஆண்டுகளாக வினாயகர் ஊர்வலம் நடத்த அரசு தடைவிதித்துள்ளது.

இந்த ஆண்டு தடையை மீறி ஊர்வலம் நடத்தப்படும்.

ராமேஸ்வரம் மிகப் புனிதமான இடம். ஆனால், ஆலயத்தின் புனிதத் தீர்த்தங்களையும், புனிதத்தையும் காப்பாற்றயாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பல தீர்த்தங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும். அதில் பக்தர்களும், யாத்ரீகர்களும் புனிதநீராட வழி செய்ய வேண்டும். கோவில் அருகிலேயே அசைவ உணவகங்கல், மதுபானக் கடைகள் உள்ளன.அவற்றை அப்புறப்படுத்தி, உடனடியாக தடவிைதிக்க வேண்டும்.

ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்று தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளது.

வினாயகர் ஊர்வலம் குறித்த இந்த கூட்டத்தின் தீர்மானம் குறித்து இப்போதே கவலையில் ஆழ்ந்துவிட்டது தமிழகஅரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+