வீரப்பனுக்கு முக்கியத்துவம் தரும் டிவிக்கள்: த.மா.கா கோபம்
சென்னை:
வீரப்பன் விவகாரத்தில் சில தனியார் டிவிக்கள் தேவையற்ற விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன. இந்த விளம்பரங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியத்துவம்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது எதிர்காலத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போல இருக்கும் என்று த.மா.கா.பொதுச் செயலாளர் பீட்டர்அல்போன்ஸ் கூறினார்.
அவர் சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதலில் சந்தன மரங்களைக் கடத்தியவன், பின்னர் யானைகளைக் கொன்று, தற்போதுதீவிரவாதக் கும்பலின் தலைவராக பரணமிக்க ஆரம்பித்துள்ளார் வீரப்பன்.
தமிழகத்தில் இரண்டு லட்சம் பேரைக் கொண்ட போலீஸ் படை இதுநாள் வரை, வீரப்பன் தலைமையில் இப்படிப்பட்ட பயங்கரவாதக் கூட்டம்உருவாகியிருப்பதைக் கண்டுபிடிக்காமல் விட்டது எப்படி?
காட்டிலிருந்து திரும்பியுள்ள கோபால் தெரிவிக்கின்ற தகவல்களைப் பார்த்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாய் வீரப்பன் விவகாரத்தில் தனியார் டி.விக்களில் சில தேவையற்ற விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில்தீவிரவாதத்திற்கு மரியாதையை ஏற்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.
அந்த சூழ்நிலை வந்துவிடக் கூடாது. தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்த்து வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசுஇறங்க வேண்டும்.
கர்நாடகாவில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க அரசு முன்வர வேண்டும். தேவையற்ற விளம்பரங்களை ஒளிபரப்பி பதட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது.
இப்பிரச்சனையில் இரண்டு அரசுகளும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications