பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா பங்கேற்காது
Subscribe to Oneindia Tamil
சண்டீகர்:
இந்தியாவில் பாகிஸ்தான் தனது தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாத வரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் உள்பட எந்தவிளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஷா கூறுகையில், டொராண்டோவில் நடக்க இருக்கும் சகாரா கோப்பைகிரிக்கெட் போட்டியில் நாம் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை.
நம் நாட்டில் தீவிரவாத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானுடன் விளையாட நாம் தயாராக இல்லை. அரசின் இந்த முடிவுக்கு ஒவ்வொருஇந்தியனும் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மேடச் பிங்சிகில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் அதை மறைக்காமல் ஒப்புக் கொண்டுவிட வேண்டும். இந்த விஷயத்தில் சிபிஐயும்வருமான வரித்துறையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications