ராஜ்குமாரைத் தேடி காட்டுக்குப் போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை தேடி அவரது ரசிகர்கள் சத்தியமங்கலம் காட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இரண்டு நாட்கள்ராஜ்குமாரைத் தேடினார்கள்.

ஜூலை மாதம் 30 ம் தேதி நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான். அவரைக்கண்டுபிடிக்க ரசிகர்கள் காட்டுக்குள் சென்றனர்.

பெங்களூர் ஸ்ரீராமபுரம் பாசியம் நகர் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் சென்று நடிகர்ராஜ்குமாரைத் தேடினார்கள்.

மன்றத்தலைவர் பழனிகாந்த் தலைமையில், துரை, விஜய பாஸ்கர், சிவா, அன்பு, ரபீக், சோமு, ஆனந்தபோஸ்,மனோகர் மற்றும் 15 பேர் சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்றனர்.

அவர்கள் கொள்ளேகால், மலைமாதேஸ்வரன், சத்தியமங்கலம், பன்னாரி வழியாக காட்டுக்குள் சென்று ராஜ்குமார்இருக்கும் இடத்தை 2 நாட்கள் தேடினார்கள். ஆனால் அவர்களால் காட்டில் இருக்கும் வீரப்பனையோ, நடிகர்ராஜ்குமாரையோ கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், ராஜ்குமார் நலமுடன் திரும்பி வரவேண்டும் என்பதற்காகஅவர்கள் பன்னாரி, மலைமாதேஸ்வரன் கோவில்களில் விசேஷ பூஜை நடத்தினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+