கலால் வரி இன்ஸ்பெக்டர் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் ஹோட்டல் ஒன்றில் மத்திய கலால் வரித் துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை சத்தி ரோட்டில் உள்ள மத்திய கலால் வரித்துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் நாகராஜ் (53). இவரது சொந்த ஊர் கரூர்மாவட்டத்தில் உள்ள முசிறி.
இவர் கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால்சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் இறந்து கிடந்ததுதெரிய வந்தது.
நாகராஜ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications