கொள்ளைக்காரர்களிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசுகள் ... சாடுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுதந்திர திருநாளில் விடுதலைப் போராட்ட தியாகிகளையும், மாவீரர்களையும்வணங்கி மகிழ வேண்டிய மத்திய மாநில அரசுகள், கொலை, கொள்ளைக்காரர்களிடம்மண்டியிட்டுக் கிடக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தி:

விடுதலைப் போராட்டத் தியாகிகளையும், மாவீரர்களையும் வணங்கி மகிழ வேண்டியமத்திய மாநில அரசுகள் கொள்ளைக்காரர்களிடம், கொலைக்காரர்களிடம்மண்டியிட்டுக் கிடப்பது வேதனை அளிக்கிறது.

மதிப்பு மிகுந்த மனித உயிர்களைப் பாதுகாப்பதில் கூட நிகழ்த்தப்படும் வெற்றுவிளம்பரங்களும், கேலிக் கூத்தான நாடகங்களும், விவேகமற்ற செய்கைகளும் தேசபக்தி மிக்கவர்களை வருந்த செய்துள்ளன.

ஒன்றுபட்ட இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான வேட்டுச் சத்தங்கள் ஆங்காங்கேகேட்கும் நிலையில் நமது நாட்டை அமைதி தேசமாய்க் காக்க வேண்டிய மாபெரும்கடமை இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

சாதியின் பேரால், மதத்தின் பேரால் மக்கள் ஒற்றுமைக்குக் கேடு இழைக்கப் புறப்பட்டுவிட்ட தீய சக்திகளை வேரறுக்க இந்திய மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டியநாள் இந்த சுதந்திரத் திருநாள்.

கண்ணீராலும் செந்நீராலும் வணங்கத் தக்க பெரியோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தீபத்தை ஒளி குன்றாமல் காக்க இந்த சுதந்திரத் திருநாளில் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+