வீரப்பனுக்கு இன்று பதில் சொல்கிறது கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனின் நிபந்தனைகளுக்கான பதில்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை திங்கள்கிழமை தமிழக அரசுக்குஅனுப்ப முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே,தலைமைச்செயலாளர் பட்டாச்சாரியா, போலீஸ் டி.ஜி.பி.தினகர், போலீஸ் கமிஷனர் மடியாள் ஆகியோருடன்ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக கர்நாடக உள்துறை செயலாளர் எம்.பி.பிரகாஷ், சென்னை சென்று வீரப்பன் விவகாரம் குறித்துஆலோசனை நடத்தி விட்டு பெங்களூர் திரும்பினார். அவரும் முதல்வர் கிருஷ்ணாவிடம் விளக்கம் அளித்தார்.

வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்றான 51 தடா கைதிகளை விடுவிப்பது, கம்பளப்பள்ளியில் 7 தலித்சமுதாயத்தினர் குடும்பங்களுக்கு செய்த நிவாரண உதவிகள் ஆகியவை குறித்த விவரங்கள் திங்கள்கிழமை தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உயர் போலீஸ் அதிகாரி சீனிவாசன் இந்த விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை தமிழக அரசிடம் சேர்பிப்பார்.

மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை: இதற்கிடையே மத்திய உள்துறை செயலாளருடன் முதல்வர்கிருஷ்ணா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ராஜ்குமார் கடத்தப்பட்டதையொட்டி கர்நாடக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அவரை மீட்க அரசு எடுத்துள்ளநடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+