அநீதிக்குத் தலை வணங்க மாட்டேன் ... செளத்ரி
சுவா:
வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக போராடுவதே பிஜியில் வாழும் இந்தியர்கள்தங்களுக்கான சம உரியைை பெறுவதற்கான சரியான வழிமுறை என்று பதவி நீக்கம்செய்யப்பட்ட பிஜி முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிஜி பிரதமர் செளத்ரி. கடந்த மே மாதம் ஜார்ஜ்ஸ்பைட் தலைமையில் நடந்த புரட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பிணைக்கைதியாக பல நாட்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். பல்வேறு குழப்பத்திற்குப் பின்56 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். செளத்ரி இந்த வாரம் இந்தியாவரவுள்ளார்.
பிஜித் தலைநகர் சுவாவில், நியூசிலாந்தைச் சேர்ந்த இந்திய நிருபருக்கு அவர் அளித்தபேட்டியில், பிஜியில் வாழும் இந்தியர்கள் அகிம்சா முறையில் வாழ்ந்து வெற்றி பெற்றமகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும். வன்முறை வன்முறையையேதோற்றுவிக்கும். அதனால் வன்முறையைக் கைவிட்டு அமைதியைப் பின்பற்றவேண்டும்.
பிஜி அமைதிக்குப் பெயர் போனது. ஆனால் அது மே 19-ம் தேதி நடந்த புரட்சியால்பறிபோய் விட்டது. இந்தியர்கள் அரசியலில் ஈடுபடாது இருந்தாலும் பிஜியில்பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பிஜி 14 உள்நாட்டுப் பிரிவுகளைக் கொண்டது. அங்கு எப்போதுமே இந்தியர்கள்பொது எதிரிகளாகவே பாவிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதமர் லைசீனியா குவார்ஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசைஸ்பீட் ஆதரிக்கவில்லை.
பிஜியில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம், பெரும்பாலானஇந்தியர்கள் பீகார் போன்ற பகுதிகளில் இருந்து கூலிகளாக அழைத்துவரப்படவர்கள்.அவர்களுக்கு எந்த விதமான பூர்வீக சரித்திரமும் கிடையாது.
இரண்டாவதாக குடியேறியவர்கள், குஜாராத்திலிருந்து வியாபாரம் செய்யவந்தவர்கள். அனைவரும் பகையை வளர்ப்பதை விட அமைதியையே விரும்பினர்.
56 நாட்கள் பிணைக் கைதியாக இருந்த போது ஒரு முறை என்னை புரட்சிக்காரர்கள்அடித்தனர். ஒரு நாளைக்கு ஒரு முறையே சாப்பிட்டேன்.அது என்னைபலவீனமாக்கியது.
நான் என்றும் அநீதிக்கு தலை வணங்கியது கிடையாது. இனியும் தலை வணங்கமாட்டேன். பிஜியில் மீண்டும் ஜனநாயகம் மலரவேண்டும் எனது விருப்பம் என்றார்செளத்ரி.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications