ஒலிம்பிக் செல்கிறது 65 பேர் கொண்ட இந்திய அணி
டெல்லி:
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 65 பேர் கொண்ட அணியை அனுப்புகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர்15-ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் 65 பேர் கொண்ட இந்திய அணிகலந்து கொள்கிறது.
ஆடவர் ஹாக்கி வீரர்கள் மற்றும் 40 தடகள வீரர், வீராங்கனைகளும் இதில்அடங்குவர். மொத்தம் 11 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது. தடகளம்,குத்துச் சண்டை, பேட்மிண்டன், ஆடவர் ஹாக்கி, ஜூடோ, ரோவிங்,துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வலுதூக்குதல் ஆகியபோட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை சிறப்பாக பங்கேற்றதில்லை. ஹாக்கிப்போட்டி மட்டும் விதிவிலக்காக உள்ளது. எட்டு முறை ஹாக்கியில் தங்கம்வென்றுள்ளோம்.
இதுதவிர ஹெல்சிங்கியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் கே.டி.ஜாதவ் தங்கம்வென்றார். அட்லாண்டா ஒலிம்பிக்கில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் வெண்கலப்பதக்கம் வென்றார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications