திட்டக் குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை:
மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்குநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாகதகுந்த ஆலோசனைகளை மாநில அரசுக்கு வழங்குவதற்காக மாநிலத் திட்டக் குழுவைதமிழக அரசு கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான இக்குழுவில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்எஸ்.வெங்கடரமணன், டி.வி.அந்தோணி, ஏ.வெங்கடராமன், டாக்டர்கள் லலிதாகாமேஸ்வரன், சண்முகசுந்தரம், ஜி.சிதம்பரம், பி.வி.இந்திரேசன், ஏ.ராமச்சந்திரன்ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும், கே.வி.பழனிதுரை முழு நேரஉறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசுஇப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறைச் செயலாளர், திட்டம் மற்றும்வளர்ச்சித் துறை செயலாளர் ஆகியோர் இக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களாகதொடர்ந்து நீடிப்பார்கள்.












Click it and Unblock the Notifications