எம்.எல்.ஏவாக பதவியேற்றார் பாண்டி முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம், திங்கள்கிழமை எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
சட்டசபை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியன் அவருக்குப் பதவிப் பிரமானம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், துணை சபாநாயகர்ராஜசேகர உடையார், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 22-ம் தேதி புதுவை முதல்வர் ஆனார் சண்முகம். ஆனால் அப்போதுஎம்.எல்.ஏவாக இல்லை. இதையடுத்து ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. தனது பதவியைராஜினாமா செய்து சண்முகத்திற்கு விட்டுக் கொடுத்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் நின்று ஜூன் 30-ம் தேதி வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வானார் சண்முகம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications