மழை வேண்டி சென்னையில் முஸ்லீம்கள் தொழுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சென்னை மெரீனா கடற்கரையில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகை மற்றும்விசேஷ பிரார்த்தனை நடத்தினர்.
தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை சார்பில் சென்னை கடற்கரை சீரணி அரங்கம் அருகேஞாயிற்றுக்கிழமை காலை முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையும், பிரார்த்தனையும் நடத்தினார்கள்.
தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி மவுலானா முப்தி சலாஹூதீன் அயூப் மழைத் தொழுகையை தலைமை தாங்கிநடத்தி வைத்தார். தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவர் உபைதுல்லா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கவுரவப் பொதுச் செயலாளர் எம்.ஜி.எம்.தாஜூதீன், சையத் அப்துல் காதர், பொருளாளர் அப்துல் ஹலீம், டாக்டர்ஹக்கீம் சையத் சத்தார், உலமாக்கள், ஜமாத்தார்கள் உள்பட ஏராளமான முஸ்லீம்கள் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications